தர்பார் திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் என புகார் - தமிழக விநியோகஸ்தர்கள் சென்னை வருகை

தர்பார் திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் என்று கூறி 8 மாவட்ட விநியோகஸ்தர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேச சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர்.
தர்பார் திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் என புகார் - தமிழக விநியோகஸ்தர்கள் சென்னை வருகை
x
ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் அண்மையில் வெளியானது.  அந்த படம்  திரையரங்குகளில் போதுமான வசூலை ஈட்டவில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக  65 கோடி ரூபாய் கொடுத்து தர்பார் திரைப்படத்தை வாங்கியிருந்த  விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு  தொகையை ரஜினிகாந்த் பெற்று தர வேண்டுமென்று நேரில் சந்தித்து  வலியுறுத்துவதற்காக  தமிழகத்தின் திரைப்பட விநியோக 8 மாவட்ட விநியோகஸ்தர்கள்  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த்தின் வீட்டிற்கு வந்தனர். அவர்களை நாளை சந்தித்து பேசுவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விநியோகஸ்தர்கள் அனைவரும் திரும்பி சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்