பெட்ரோல் பங்க் துவக்க காவல் அதிகாரியின் போலி கையெழுத்து - காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

சென்னையில் புதிய பெட்ரோல் பங்க் துவங்க காவல்துறை அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்ட ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்ரோல் பங்க் துவக்க காவல் அதிகாரியின் போலி கையெழுத்து - காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
x
கடந்த 3 மாதங்கள் முன்பு பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக, காவல் துறையினரின் தடையில்லா சான்றிதழ் பெற ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகினார். இதற்கு போலீசார் மறுப்பு கூறவே சிவா என்பவர் தடையில்லா சான்றிதழ் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், தொழிலதிபர் சிவா என்பவர் திருவொற்றியூர் பகுதியில் கேஜிஎல் என்னும் பெயரில் 30 க்கும் மேற்பட்ட பங்க்குகள் துவக்கியது தெரிய வந்துள்ளது. இதற்காக காவல்துறை அதிகாரியின், போலியான கையெழுத்திட்டதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் சிவா உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். சிவாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு திட்டமிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்