"இரண்டரை வயது குழந்தையோடு ஓட்டம் பிடித்த பெண் : குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போலீசார்"

திருப்பூர் அருகே குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு வந்த பெண் அதே குழந்தையை தூக்கிக் கொண்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அரசங்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலை ராஜன் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் மகள் உள்ள நிலையில் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் குழந்தையை வளர்க்க சிரமப்பட்ட சுடலைராஜன் தன் மகளை காப்பகத்தில் சேர்த்துள்ளார். இதனிடையே குழந்தையை பழனிக்கு அழைத்துச் சென்ற சுடலைராஜன், மீண்டும் வீட்டுக்கு வரும் போது இளம்பெண் ஒருவரை உடன் அழைத்து வந்துள்ளார். வீட்டு வேலைகள் மற்றும் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக அந்த பெண்ணை அழைத்து வந்த நிலையில் திடீரென அந்த பெண் குழந்தையோடு மாயமானார். இதுதொடர்பாக போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. அப்போது ஈரோடு பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் அந்தப் பெண் இருப்பதை கண்ட போலீசார் அவரை உடனே கைது செய்தனர். விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பதும் குழந்தையுடன் ரயில் மற்றும் பஸ்ஸில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதால் தூக்கிச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார் தந்தையிடம் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்