புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன சிகிச்சை மையங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளது
புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன சிகிச்சை மையங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்து வைத்தார்.இதேபோல, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்தவாறே, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை, காணொலிக் காட்சி மூலமாக அவர் திறந்து வைத்தார். 6 கோடி ரூபாய் மதிப்பிலான கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை வளாகத்தையும், 22 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் ஆக்சிலேட்டர் கருவி கற்றும் சி. டி. சிமுலேட்டர் கருவிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்