"இந்தி வளர்ச்சித்துறை அமைச்சரா மாஃபா பாண்டியராஜன்?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்தி வளர்ச்சி துறை அமைச்சராக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மொழிபோர் தியாகிகள்  வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியவர்  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என்று கூறினார். திமுக ஆட்சியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.  மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்தி திணிப்பு முயற்சி நடைபெறுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்