குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : இடைத் தரகரை நெல்லையில் கைது செய்த சிபிசிஐடி போலீசார்

குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே இடைத்தரகர் ஐயப்பன் என்பவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : இடைத் தரகரை நெல்லையில் கைது செய்த சிபிசிஐடி போலீசார்
x
குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே இடைத்தரகர் ஐயப்பன் என்பவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இவருடன் தொடர்புடைய முத்துராமலிங்கம் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

குரூப் 4 விவகாரம் - இதுவரை 5 பேர் கைது 

குரூப்- 4 முறைகேடு தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். முறைகேடுகள் செய்தது உறுதியானதாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் , விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


"முறைகேடு தேர்வர்களிடம் ரூ.9 கோடி வசூல்"

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களிடம் இருந்து தலா ஒன்பது லட்ச ரூபாய் வீதம், ஒன்பது கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக ராமநாதபுரத்தில் நடந்த போட்டித்தேர்வுகளில் முறைகேடு அரங்கேறியிருப்பதும், வருவாய்த்துறை அதிகாரிகள் கவனத்திற்கு வந்த போதும், நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் அடுத்த அதிரடி 

குரூப் 4 முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னணி பயிற்சி நிலையங்களில் அதிரடி ஆய்வு நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்வு நடந்த உடனேயே, அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடைகளை பூர்த்தி செய்ய முடியும் எனில், அது போட்டித்தேர்வு பயிற்சி மையங்களை நடத்தக்கூடிய நிர்வாகிகளால் மட்டுமே முடியும் என்ற கருத்தும் வெளியானது.

"குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசாரணை தேவை" : பயிற்சி மைய நிர்வாகிகள் வலியுறுத்தல்

கடந்த 2017ல் நடந்த குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆணையத்தின் முன்னாள் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என பயிற்சி மையங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1300 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற இந்த தேர்விலும் முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்