கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - நெற் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்தது.
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - நெற் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
x
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்தது. கும்பகோணம் மற்றும் அதன்வடக்கு பதிகளான இன்னம்பூர், தேவனாஞ்சேரி, திருப்புறம்பியம், அசூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. அத்துடன் அப்பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மழைநீரில் சாய்ந்தது. அறுவடைக்கு தயாரான நிலையில் பயிர்கள் சாய்ந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்