துக்ளக்' 50வது ஆண்டு விழா: வெங்கய்யா நாயுடு வெளியிட்ட விழா மலர் முதல் பிரதியை பெற்றார் ரஜினிகாந்த்

துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.
துக்ளக் 50வது ஆண்டு விழா: வெங்கய்யா நாயுடு வெளியிட்ட விழா மலர் முதல் பிரதியை பெற்றார் ரஜினிகாந்த்
x
துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா சென்னையில்  நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக வளர்ச்சிக்காக  பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது - பிரதமர் மோடி 

தமிழக வளர்ச்சிக்காக  பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50வது ஆண்டு விழாவில் காணொலி காட்சி மூலம் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அரசியலில் இருந்து தாம் ஓய்வு பெற்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயற்சிகளை மேற்கொள்கிறார் என்று குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 


காலம், அரசியல், சமுதாயம் கெட்டு போய் கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


ரஜினிக்கு அவரது பொறுப்பு என்ன என்பது தெரியும் - ஆடிட்டர் குருமூர்த்தி 

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் என, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.  

துக்ளக் இதழின் 50 வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, முழுமையாக இந்து மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்றார். கலாச்சார ரீதியாக இந்துவாக  இருந்தாலும், அரசியல் ரீதியாக இங்கே இந்துக்கள் இல்லை என்றும், தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்து விட்டது என்றும் அவர் கூறினார். லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை என்றும் குருமூர்த்தி குறிப்பிட்டார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு, அவரது பொறுப்புகள் என்ன என்பது தெரியும் என்று கூறிய குருமூர்த்தி,  ஊழல் குற்றச்சாட்டால் சிறை சென்று வந்துள்ள சிதம்பரம், தன்னை தியாகி போல காட்டிக் கொள்வதாக விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்