2 வயது பெண் குழந்தை கடத்தல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 வயது பெண் குழந்தை கடத்தல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு
x
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மர்சீனா, தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது அமீது என்பவருடன்  மர்சீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 10வது நடைமேடையில், மர்சீனா, அமீது மற்றும் 2 குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தனர். காலையில் எழுந்து மர்சீனா பார்த்த போது  தனது 2 வயது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, மர்சினா அளித்த புகாரை அடுத்து , ரயில்வே போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை கொண்டு விசாரித்து வருகின்றனர். அதில், அமிதின் நண்பர் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது  தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்