உள்ளாட்சி தேர்தலில் சிசிடிவி கேமரா வைக்கவில்லை என்றால், திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் சிசிடிவி கேமரா வைக்கவில்லை என்றால், திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
உள்ளாட்சி தேர்தலில் சிசிடிவி கேமரா வைக்கவில்லை என்றால், திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில், ஆயிரத்து 508 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கினார். பின்னர், மேடையில் பேசிய அவர், ஸ்டாலினோ, திமுகவினரோ, தேர்தலை நிறுத்த முடியாது என்றும், தங்கள் கோரிக்கையில் நியாயம் இருந்ததால், அதை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாகவும் கூறினார். திமுகவின் வெற்றியை பார்த்து ஆளும்கட்சி பிரமித்துள்ளதாக கூறிய அவர், நகர்ப்புற தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான் என்றார். ஒருவேளை நடத்தியிருந்தால், சென்னையில் திமுக மேயர் பதவி வகிக்கும் என்ற ஸ்டாலின், தை பிறந்தால், வழி பிறக்கும் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்