கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு

கோவையில் தமுமுகவினர் அண்ணா சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடும்பத்துடன், பேரணி நடத்தினர்.
கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு
x
கோவையில் தமுமுகவினர் அண்ணா சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடும்பத்துடன், பேரணி நடத்தினர். இதில் பெண்கள் குழந்தைகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியின் போது குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் தேசிய கொடிகளை கையில் ஏந்தியவாறு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஒரு லட்சம் கையெழுத்து பிரதிகள் அடங்கிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இடம் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்