பொங்கல் பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் எருதுவிடும் திருவிழா - காளைகளுக்கு தீவிர பயிற்சி
பதிவு : ஜனவரி 13, 2020, 11:33 AM
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை போல், வட மாவட்டங்களில் எருது விடும் திருவிழா பிரலமானது. 

வேலூர்,  திருப்பத்தூர், ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, 
சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும்  எருதுவிடும் திருவிழாவை எருதுக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கின்றனர். 

வாணியம்பாடி, ஆம்பூர், அரூர், வெள்ளக்குட்டை, வளையாம்பட்டு, விண்ணமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் எந்த அனுமதியும் இல்லாமல் , காலகாலமாக நடத்தப்பட்டு வந்த இந்த எருது விடும் திருவிழாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

காளைகள் ஓடும் பகுதியில்  யாரும் நிற்கக்கூடாது, காளைகளை கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் உள்ளிட்ட பல  விதிமுறைகளுடன் தற்போது  எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

எருது விடும் திருவிழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வாணியம்பாடி அருகே  மாராப்பட்டு  கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் 13 காளைகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு காளையான  ஒத்த கொம்பன் காளை  பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று கிராம மக்களை 
பெரிதும் கவர்ந்துள்ளது. 

காளைகளுக்கு சத்தான உணவும், பல பயிற்சிகளையும் 
அளிப்பதாக அவற்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமன்றி  ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஒற்றை கொம்பன் காளைக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளதாகவும், அவர்கள்,  காளையின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதாகவும்  பன்னீர்செல்வம் பெருமையுடன் கூறுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

730 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

378 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

137 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

97 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

74 views

பிற செய்திகள்

ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் டிக் டாக்கில் ஜாலியான வீடியோ பதிவு

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அட்டகாசங்களை டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

83 views

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

34 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

55 views

பலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை

கடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

21 views

உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

40 views

மதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.