ஒன்றிய கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம் - அதிமுகவினர் 48 பேர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், பரபரப்பு நிலவியது.
ஒன்றிய கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம் - அதிமுகவினர் 48 பேர் மீது வழக்கு
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து காரில் வந்த, ஒன்றியக் கவுன்சிலர்களை கடத்தியது தொடர்பாக இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. தேவகோட்டை அருகே புதுக்குறிச்சி என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அதிமுகவினர் பெட்ரோல் குண்டு வீசியதில் 4 கார்கள் சேதமடைந்தன. மேலும் இந்த மோதலில், திமுக தரப்பைச் சேர்ந்த போஸ், புதுக்குறிச்சியைச் சேர்ந்த விஜய் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது தொடர்பாக போஸ் கொடுத்த புகாரின் பேரில், 48 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் காளிமுத்து உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்