ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை 39 வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை 39 வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு நடந்த விசாரணைடியில், துப்பாக்கி சூட்டின் காரணமாக ஆலை மூடப்பட்டது என்பது தவறு என, அரசுத்தரப்பு வாதிட்டது. இதனையடுத்து ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரியமா சுந்தரம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
Next Story