சிறைவாசிகள் பயிரிட்ட கரும்பு : போலீசார் முன்னிலையில் அறுவடை

திருச்சி மத்திய சிறை கைதிகள் பயிரிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொங்கல் கரும்புகள் இன்று அறுவடை செய்யப்பட்டன.
சிறைவாசிகள் பயிரிட்ட கரும்பு : போலீசார் முன்னிலையில் அறுவடை
x
திருச்சி மத்தியச் சிறையில் உள்ள தண்டனை கைதிகள் மனம் திருந்தி வாழ்வதற்காக, பேக்கரி, உணவகம் போன்ற சுயதொழில் வாய்ப்புகளை சிறைத்துறை ஏற்படுத்தி உள்ளது. இவைகளுக்கு முன்பிருந்தே தோட்ட காய்கறி உற்பத்தியும் செய்யப்படுகின்றன. இந்நிலையில், விவசாய வேலை தெரிந்த விவசாயிகள், திறந்த வெளிச் சிறையில் விவசாய பணிகளில் ஈடுபட்டு, பொங்கலை எதிர்நோக்கி கரும்பு பயிரிட்டிருந்தனர். இயற்கை வேளாண் முறையில், ஒன்னே கால் ஏக்கரில் பயிரிட்டது அறுவடைக்கு தயாராக இருந்தது. அவை இன்று அறுவடை செய்யப்பட்டது. இவை, தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் அன்று சிறைவாசிகளுக்கு வழங்கும் உணவில் பயன்படுத்தியது போக, மீதமுள்ளவை சிறைவாசலில் உள்ள அங்காடியில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்