"குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
x
கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களை போல் தமிழகத்திலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். பதிலளித்த சபாநாயகர் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் கொடுத்த தீர்மானம் பரிசீலனையில் இருப்பதால், அது குறித்து பேச வேண்டாம் என்றார். மீண்டும் குறுக்கிட்ட ஸ்டாலின், 2 நாளில் பேரவை முடிய உள்ளதால், முக்கியத்துவம் கருதி விவாதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அனுமதி மறுத்த சபாநாயகர், விதிமுறைகளை சரிபார்த்து தாம் முடிவு எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றார். இதையடுத்து, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்