வாடிக்கையாளர் வருகை அதிகரிப்பால் சலங்கை தயாரிப்பாளர்கள் உற்சாகம்

வாடிக்கையாளர் வருகை அதிகரிப்பால் சலங்கை தயாரிப்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வாடிக்கையாளர் வருகை அதிகரிப்பால் சலங்கை தயாரிப்பாளர்கள் உற்சாகம்
x
தமிழரின் பாரம்பரிய கலைகள் பலவற்றிலும், தனக்கான தனி முத்திரையை பதிப்பது சலங்கைதான். மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம், தெருக்கூத்து பரத நாட்டியம்என அனைத்திலும், மண்மணம் பரப்பும் சலங்கை, வண்டி காளைகளின் கழுத்து மற்றும் நெற்றியிலும் நின்று ஆடுகின்றன. . சில ஆண்டுகளாக சலங்கை தயாரிப்பு தொழிலை விட்டு பலரும் வெளியேற, தெரியாத புதிய தொழிலைவிட, தெரிந்த பழைய தொழிலே பரவாயில்லை என செய்து வந்தனர் மணப்பாறை அடுத்த வெங்கட்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள சில குடும்பத்தினர். தற்போது  34 வகையான வேலைபாடுகளில்12 வகையான சலங்கைகள் தயாரிப்பதாக அவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்