குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டி நெல்லையில் பேரணி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் நெல்லையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டி நெல்லையில் பேரணி
x
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் நெல்லையில்  மாபெரும் பேரணி நடைபெற்றது.  மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து துவங்கிய பேரணி, வி.எஸ்டி பள்ளிவாசல் வழியாக பஜார் திடலில் நிறைவடைந்தது. பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில், 650 அடி தேசிய கொடியை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு சென்றனர். இதை தொடர்ந்து பஜார் திடலில் கண்டன ஆர்பாட்டமும் நடைபெற்றது.



Next Story

மேலும் செய்திகள்