நீராவி முருகனை நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி - குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு
பிரபல கடத்தல் மன்னன் நீராவி முருகன் மற்றும் அவனது கூட்டாளிகளை பவானி போலீசார் விசாரணைக்காக நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர்.
ஈரோட்டில், விவசாயி கடத்தல் வழக்கு மற்றும் நிதி நிறுவன அதிபரை மிரட்டி 150 பவுன் தங்க நகைகள் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நீராவி முருகனை கடந்த டிசம்பர் மாதம் நெல்லையில் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அதன் பின் நீராவி முருகனுடன் அவனது கூட்டாளிகள் 2 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நீராவி முருகனையும் கூட்டாளிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீரபாண்டியன் , நீராவி முருகன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு நீராவி முருகன் அழைத்து செல்லப்பட்டார்.
Next Story

