பட்டதாரியின் உதவியோடு தேன்கூட்டை கலைத்த தீயணைப்பு வீரர்கள்

சென்னையில் முதன் முறையாக பட்டதாரி இளைஞரின் உதவியோடு தீயணைப்பு துறையினர் தேன்கூட்டை பாதுகாப்பான முறையில் அகற்றினர்.
பட்டதாரியின் உதவியோடு தேன்கூட்டை கலைத்த தீயணைப்பு வீரர்கள்
x
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் , சென்னையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது விருத்தாசலத்தை சேர்ந்த தோட்டக்கலை பட்டதாரி சுதந்திர செல்வன், பாதுகாப்பான முறையில் தேன்கூட்டை அப்புறப்படுத்துவது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு செய்து காட்டினார். இந்நிலையில் அண்ணாநகரில் உள்ள பூங்காவில் , தேனிகூட்டை சுதந்திர செல்வனுடன் இணைந்து தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர். பழைய முறையில் தேன்கூடுகளை அப்புறப்படுத்தும் போது தேனீக்கள் உயிரிழந்ததாகவும் , இந்த முறையை பயன்படுத்தினால் தேனீக்கள் உயிரிழப்பதில்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.




Next Story

மேலும் செய்திகள்