திருவாரூர்: தே.மு.தி.க. வேட்பாளர் போஸ்டரால் பரபரப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க. கூட்டணியைவிட தி.மு.க. கூட்டணி அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது.
திருவாரூர்: தே.மு.தி.க. வேட்பாளர் போஸ்டரால் பரபரப்பு
x
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க. கூட்டணியைவிட தி.மு.க. கூட்டணி அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பெருந்தரகுடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தே.மு.தி.க.வை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் போட்டியிட்டார். அதே பதவிக்கு அதிமுக-வை சேர்ந்த ஒருவரும் போட்டியிட்ட நிலையில், பெருந்தரகுடி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை திமுக தட்டி சென்றது. இதனால்  விரக்தி அடைந்த தே.மு.தி.க. வேட்பாளர் ராஜ மாணிக்கம் தனக்காக வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து பெருந்தரகுடி ஊராட்சி முழுவதும் ஒட்டிய போஸ்டர் அ.தி.மு.க.  கூட்டணி கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்