அதிமுக வசமாகும் புதுக்கோட்டை ஒன்றியம் : சுயேட்சை உறுப்பினருக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவி

ஒன்றியக்குழு தலைவர் பதவியை சுயேட்சை உறுப்பினருக்கு விட்டுக்கொடுத்து புதுக்கோட்டை ஒன்றியத்தை கைப்பற்றும் முயற்சியில் அதிமுக இறங்கியுள்ளது.
அதிமுக வசமாகும் புதுக்கோட்டை ஒன்றியம் : சுயேட்சை உறுப்பினருக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவி
x
புதுக்கோட்டை ஓன்றியத்தில் அதிமுக கூட்டணி 7 இடங்களையும் திமுக கூட்டணி 6 இடங்களையும் சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளன.

புதுக்கோட்டை ஒன்றிய குழு தலைவர் பதவி பட்டியல் இனத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒருவர் கூட, பட்டியல் இனத்தை சேர்ந்தவர் இல்லை. இதனையடுத்து பட்டியல் இனத்தை சேர்ந்த, சுயேட்சையாக வெற்றிப்பெற்றுள்ள  கருப்பையா மற்றும் சின்னையா ஆகியோரில், ஒருவருக்கு  ஒன்றிய குழு தலைவர் பதவியை வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது. 

இதனையடுத்து அவர்கள் 2 பேரும் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்