தி.மு.க. வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

விதிகளை பின்பற்றியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு
x
உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆளும் கட்சியினர் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்துவதாக, தி.மு.க. மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த மனுவை, நேற்றிரவு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விதிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று, எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை இன்று தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்