"பெண்கள் பாதுகாப்பில் தலைசிறந்த நகரம் சென்னை" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம்

இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பில் தலைசிறந்த நகரமாக சென்னை விளங்குவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பில் தலைசிறந்த நகரம் சென்னை - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம்
x
இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பில் தலைசிறந்த நகரமாக  சென்னை விளங்குவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டை  விட  சாலை விபத்துகள் குறைந்து இருப்பதாகக் கூறினார். சாலை விபத்துகளில் கடந்த 2018-ம் ஆண்டில் ஆயிரத்து 297-ஆக இருந்த பலி எண்ணிக்கை, 2019-ல் ஆயிரத்து 252 ஆக குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார். கடந்த  ஆண்டில் வரதட்சணை கொடுமை தொடர்பாக எந்தஒரு வழக்கும் பதிவாகவில்லை  என அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்