ஸ்ரீரங்கம் மடப்பள்ளி முன்பு கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்? - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் புகைப்படங்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளி முன்பு கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டப்பட்டது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஸ்ரீரங்கம் மடப்பள்ளி முன்பு கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்? - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் புகைப்படங்கள்
x
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சாஸ்திர, சம்பிரதாயங்களின்படி செயல்பட்டு வருகிறது. 'ஆங்கிலப் புத்தாண்டுக்கு நள்ளிரவில் கோயில் திறப்பது' போன்ற செயல்பாடுகள் அங்கு கிடையாது. 

இந்நிலையில், கோயில் மூலவர் சன்னதி அருகேயுள்ள மடப்பள்ளி வாசலில், நேற்று நள்ளிரவு, 12 மணிக்கு சிலர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டது போன்ற 
புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அது குறித்து விளக்கம் அளித்துள்ள கோவில் நிர்வாகம், மடப்பள்ளி ஊழியர்கள் யாரும் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடவில்லை என தெரிவித்துள்ளது. 

வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கு கூடுதலாக பிரசாதம் தயாரிக்க தினக்கூலி அடிப்படையில், வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்