6 வயது சிறுவன் அடித்துக் கொலையா? : சந்தேகத்தின் பேரில் ஒருவ​ரை கைது செய்து விசாரணை

கோவில்பட்டி அருகே 6 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த சிறுவனின் உடலை தேடும் ப​ணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6 வயது சிறுவன் அடித்துக் கொலையா? : சந்தேகத்தின் பேரில் ஒருவ​ரை கைது செய்து விசாரணை
x
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு முத்துலாபுரத்தை சேர்ந்த ஜெயசங்கர், ரேவதி தம்பதியின் 6 வயது மகன் நகுலன் அங்கு உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில், எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அருள்ராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும்  தெரிவித்துள்ளனர். அருள்ராஜை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில்,  சிறுவனை அடித்துக் கொலை செய்ததாகவும் உடலை எங்கு வீசினேன் என்று தெரியவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே குற்றவாளியை தப்பிக்க வைக்க போலீசார் முயற்சி செய்வதாக கூறி, சிறுவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் மதுரை, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் தேங்கியது. போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து  பின்னர் மறியல் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்