ஆவடி : சாலையில் பனைமரம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை அடுத்த ஆவடி சின்னம்மன் கோவில் சாலையில், திடீரென பனைமரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆவடி : சாலையில் பனைமரம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
x
சென்னை அடுத்த ஆவடி சின்னம்மன் கோவில் சாலையில், திடீரென பனைமரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால், விபத்து நிகழாமல் தடுக்க, அப்பகுதி மக்கள், இந்த பனைமரத்தை வைத்துள்ளனர். விபத்தை தடுக்க மரம் வைக்கப்பட்டிருந்தாலும், அந்த மரத்தாலேயே விபத்து நிகழும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்