வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருவுருவப்படம் : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் ஏற்பாடு

புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த மண்டபத்தில் மீண்டும் அத்திவரதர் திருவுருவப்படம் வைக்கப்பட உள்ளது.
வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருவுருவப்படம் : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  கோயிலில் ஏற்பாடு
x
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 46 நாட்கள் காட்சி தந்த அத்திவரதரை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர். இந்த நிலையில் அத்திவரதர் வைக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் அவரின் திருவுருவ படத்தை வைக்க வேண்டுமென பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டும் அத்திவரதர் உற்சவத்தை நினைவு கூறும் வகையிலும் திருவுருவ படம் ஒன்று வைக்கப்பட உள்ளது. 8 அடி உயரமும், 4 அடி அகலமும்  கொண்ட அத்திவரதர் திருவுருவ படம் சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் வைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் படமானது திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்