"பைக் பந்தயம் - கடுமையான நடவடிக்கை தேவை" - ராமதாஸ் அறிக்கை

மக்களை மிரட்டும் இரு சக்கர வாகன பந்தயங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பைக் பந்தயம் - கடுமையான நடவடிக்கை தேவை - ராமதாஸ் அறிக்கை
x
மக்களை மிரட்டும் இரு சக்கர வாகன பந்தயங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இருசக்கர வாகன பந்தயங்கள் அதிகரித்து வரும் நிலையில், பந்தயங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க தனிச்சட்டப் பிரிவு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளின் செயலை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்