"அனுமதியின்றி கோலம் போட்டது தவறு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாட்டின் முக்கிய பிரச்சினையில், போராட்டத்தை தூண்டும் விதமாக அனுமதியின்றி கோலம் போட்டது தவறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
x
நாட்டின் முக்கிய பிரச்சினையில், போராட்டத்தை தூண்டும் விதமாக அனுமதியின்றி கோலம் போட்டது தவறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில், அவரது சொந்த ஊரில் வாக்களித்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டங்களை தூண்டக்கூடாது என கூறினார். ஆளுங்கட்சிக்கு உள்ள பொறுப்பை போல, எதிர்கட்சி தலைவருக்கும் உள்ளது என்றும், மக்களை தவறாக வழிநடத்த கூடாது என்றும் கூறினார். கோலத்துக்குள் கருத்துகளை சொல்வது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்