கொடைக்கானலில் குதிரை மூலம் ஓட்டுப்பெட்டிகள் பயணம்
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்காக, கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு, குதிரை மூலம் ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
வெள்ளகவி, சின்னூர், பெரியூர் கிராமங்களுக்கு ஓட்டுப் பெட்டிகளை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இதற்காக கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஓட்டுப் பெட்டிகள் வட்டக்கானல் வரை வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து குதிரைகள் மூலம் வெள்ளகெவி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இக்கிராமத்தில் 415 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 15க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

