ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை மாநகர காவல் துறை

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை மாநகர காவல் துறை பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை மாநகர காவல் துறை
x
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், துணை ஆணையர்களின் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
இதில்  நட்சத்திர விடுதிகளில்  இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப் பட்டுள்ளது. நீச்சல் குளத்தின் மீது எந்தவிதமான கொண்டாட்டங்களிலோ அல்லது  கேளிக்கை விருந்துகளிலோ ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் மது போதையில் இருப்பவர்களை விடுதி நிர்வாகம் ஓட்டுனர்களை வைத்து காரில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது போதையில் வேண்டுமென்று பிரச்சினையில் ஈடுபட்டால் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதிகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை கண்காணிப்பு கேமிரா மூலம் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்