பிஸ்கட் குடோனில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் : சட்டையை கிழித்து அதிமுக பிரமுகர் ரகளை

பிஸ்கட் குடோனில் குட்கா பதுக்கிய சம்பவத்தில் சிக்கிய அதிமுக பிரமுகர் சட்டையை கிழித்து கொண்டு போலீசாரிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிஸ்கட் குடோனில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் : சட்டையை கிழித்து அதிமுக பிரமுகர் ரகளை
x
பிஸ்கட் குடோனில் குட்கா பதுக்கிய சம்பவத்தில் சிக்கிய அதிமுக பிரமுகர் சட்டையை கிழித்து கொண்டு போலீசாரிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் பள்ளிகொண்டா அடுத்த அப்துல்லாபுரத்தில் பிஸ்கட் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 டன் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இந்த சம்பவத்தில் குடோன் உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான சக்திவேல் உள்பட 9 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அதிமுக பிரமுகர் சக்திவேல், சட்டையை கிழித்து கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்