சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற தேவையில்லை : மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற தேவையில்லை : மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கை நிராகரிப்பு
x
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகம், உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கீழ் புதுச்சேரியும் உள்ளதால் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது முறையாக இருக்காது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பம்பாய் உயர் நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படவில்லை என்பதால்,  பெயர் மாற்றம் தேவையில்லை என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. Next Story

மேலும் செய்திகள்