இளவட்டக்கல் தூக்கும் பயிற்சி - உரல் கல்லை தூக்க ஆர்வம் காட்டிய பெண்கள்
இளவட்டக்கல் தூக்கும் பயிற்சியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வம் காட்டினர்.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று இளவட்டக்கல் தூக்கும் நிகழ்வு. இளவட்டக்கல்லை தூக்கும் இளைஞர்களுக்கு பெண்களை மண முடித்து வரும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்து தொடர்கிறது.
சுமார் 100 கிலோ எடை கொண்ட வழவழப்பான கல்லை தூக்குவது வீரத்தின் அடையாளமாக கருதப்படுவதால் இது இன்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்வு நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிக்காக இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இளவட்டக்கல்லை இளைஞர்கள் தூக்கிய நிலையில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பெண்களும் உரலை தூக்கி பயிற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்வை ஊர்மக்கள் ஒன்று கூடி ரசித்ததோடு கோஷங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
Next Story