"சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்ட தொடரும்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்ட தொடரும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
x
சென்னை அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அண்ணா நூல் தொகுப்பு வெளியீட்டு விழா  நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த  சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் வரும் 23 ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், அந்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் கூறினார். அந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்