ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை : ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை : ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
x
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இருக்கை அமைப்பது தொடர்பான, பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், திட்டம் எந்தவித தாமதமுமின்றி உரிய காலகட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பளிப்பு செய்யப்படும் தொகை, தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, மற்றும் பொருாளாதார திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்