டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு

டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ்நாடு இல்லத்தில், அதிமுக எம்பிக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு
x
காந்தியின், 150ஆம் ஆண்டு நிறைவு விழாவை, அனைத்து மாநிலங்களிலும், சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, தலைமையில்  நடைபெற உள்ள இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதற்காக தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் டெல்லி சென்றார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு அதிமுக எம்பிக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்