"ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அன்புமணியைக் காப்பாற்றவே ஆதரவு" - ராமதாஸ் மீது திமுக எம்.பி, டி.ஆர்.பாலு விமர்சனம்

ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக, சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையைக் பாமக நிறுவனர் ராமதாஸ் காவு கொடுத்துள்ளதாக திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அன்புமணியைக் காப்பாற்றவே ஆதரவு - ராமதாஸ் மீது திமுக எம்.பி, டி.ஆர்.பாலு விமர்சனம்
x
ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக, சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையைக் பாமக நிறுவனர் ராமதாஸ் காவு கொடுத்துள்ளதாக திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், அன்புமணி மீதான ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால்,பா.ஜ.க. அரசின் அத்தனை தமிழக விரோதத் திட்டங்களையும், அரசியல் சட்ட விரோத  நடவடிக்கைகளையும் ராமதாசு ஆதரிப்பதாக கூறியுள்ளார். ஈழத்தமிழர்களின் உரிமையைத் குழிதோண்டிப் புதைக்கும் மசோதாவிற்கு ஆதரவளித்து விட்டு, தி.மு.க. மீது விமர்சனம் வைக்க, ராமதாஸ்  மனம்  கூசியிருக்கும் என்று அந்த அறிக்கையில் டி. ஆர். பாலு கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்