தூத்துக்குடி வந்த எகிப்து வெங்காயம் : வெங்காயத்தை வாங்க முன்வராத பொது மக்கள்
தூத்துக்குடியில், எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க மக்கள் முன்வரவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
வெங்காய விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் வரத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எகிப்த்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தூத்துக்குடி காமராஜர் தினசரி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. கிலோ 130 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும், எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். விலை அதிகமாக இருந்தாலும் உள்நாட்டு வெங்காயத்தையை வாங்கவே பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், எகிப்து இறக்குமதி வெங்காய விற்பனை மந்தமாகவே உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். உணவக பயன்பாட்டுக்கு மட்டுமே எகிப்து வெங்காயத்தை வாங்கி செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story

