வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து - தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

திண்டுக்கல் அருகே காலையிலேயே வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி அரங்கேறி உள்ளது.
x
செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும், பெண் வேட்பாளர் ஒருவர் இந்த பிரியாணி விருந்து அளித்ததாக கூறப்படுகிறது. இதற்காக அங்குள்ள அரிசி ஆலை வளாகத்தில் காலையிலேயே, பொதுமக்கள் குவிந்தனர். பிரியாணி விருந்தை தொடர்ந்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், விருந்து நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர். இதனால் வாங்கிய பிரியாணியை அப்படியே வைத்து விட்டு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து தேர்தல் விதிமீறல் நடந்ததா? பணப்பட்டுவாடா செய்யப்பட்டதா? என்பது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்