பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி - கனிமொழி, குஷ்பு, ஜாங்கிட் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி - கனிமொழி, குஷ்பு, ஜாங்கிட் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
x
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு,  காவல்துறை முன்னாள் டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய  குஷ்பு நகரத்தில் வாழும் பெண்களுக்கு இந்த சமூகம் நம்மை பற்றி என்ன நினைக்கிறது என்ற பயம் உள்ளதாக தெரிவித்தார்.  பெண்கள் தைரியமாக காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். பின்னர் பேசிய முன்னாள் டிஜிபி ஜாங்கிட் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக திகழ்ந்து வருவதாக கூறினார். சென்னையில் 3 லட்சத்துக்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும்,  இதற்காக நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனை பாராட்டுவதாகவும் ஜாங்கிட் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்