"தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு"

சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சி மூலம் நல்லாட்சி தழைக்க பாடுபட, தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
x
தொண்டர்களுக்கு அவர் எழுதிய நீண்ட கடிதத்தில்,  உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல்  தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதற்கு மாநிலத் தேர்தல் ஆணையமும், அதிமுக. அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்காமல், அறிவிக்கப்பட்ட முறையற்ற தேர்தலை  எதிர்த்து தான், திமுக நீதிமன்றம் சென்றதாக கூறியுள்ளார்.  அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்திடத் துடிக்கும் அதிமுக அரசுக்கு, தக்க பாடம் புகட்ட வேண்டும் என, ஸ்டாலின் கூறியுள்ளார். சூழ்ச்சிகளை முறியடிக்க, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தை சந்தித்திட, திமுக தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்