சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் - விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் சரிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கடந்த 2 ஆம் தேதி சுற்றுச் சுவர் சரிந்து விழுந்ததில்,17 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகி சாமுவேல் ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அமர்வு,  தீண்டாமை சுவர் என கூறப்படும் அந்த சுற்றுச் சுவர், பட்டா நிலத்தில் கட்டப்பட்டதா, அதை எழுப்பியபோது குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் எழுப்ப கூடாது என விதிகள் இருந்ததா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியது. நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்