"வெங்காய விலையை கட்டுப்படுத்த புது முயற்சி - பொதுமக்கள் கருத்து"

மக்களிடம் வரவேற்பு பெறாத எகிப்து வெங்காயம்
x
கடந்த ஒரு மாதமாக உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலையால் பொதுமக்கள் கண்ணீர் வடித்து வரும் நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது, மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து,  வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டது. அதன் படி, எகிப்து போன்ற வெளிநாடுகளில் இருந்து ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த வெங்காயம் தமிழக சந்தைகளிலும் அறிமுகமாகின. திருச்சியில் 40 டன் , சென்னையில் 60 டன் , மதுரையில் 120 டன் என இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு வெங்காயங்கள் கிலோ ஒன்று 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் எகிப்து வெங்காயம், கண் எரிச்சலை ஏற்படுத்தாத வகையில் பெரியளவில் இருப்பதாக தெரிவிக்கும் வியாபாரிகள், வெளிநாட்டு வெங்காயத்திற்கு பொதுமக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்