கீழடி முதல் 3 கட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு எப்போது? - ராமதாஸ் கேள்வி

கீழடி அகழ்வாய்வு தொடர்பாக நடைபெற்ற மு​தல் மூன்று கட்ட ஆய்வறிக்கை எப்போது வெளியிடப்படும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கீழடி முதல் 3 கட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு எப்போது? -  ராமதாஸ் கேள்வி
x
கீழடி அகழ்வாய்வு தொடர்பாக நடைபெற்ற மு​தல் மூன்று கட்ட ஆய்வறிக்கை எப்போது வெளியிடப்படும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் தொல்லியல் பெருமிதமான கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வின்  முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இவற்றை வெளியிட உயர்நீதிமன்றம் இருமுறை விதித்த கெடுவும் முடிந்து விட்ட நிலையில், அகழாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படாதது வருத்தம் அளிப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டில் நடந்த முதற்கட்ட ஆய்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படாததற்கு அரசியல் காரணங்களைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்