கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10க்கு விற்பனை - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் அதனை வாங்க மக்கள் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டி பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் வியாபாரிகள் பெங்களூருவில் இருந்து குறைவான விலைக்கு பல டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து வந்தனர். இதையடுத்து நேற்று ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க ஏராளமான மக்கள் முண்டியத்துக் கொண்டு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்