மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு - கடிதம் மூலம் திமுக எம்.பி வலியுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்படும் இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று திமுக எம்.பி வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு -  கடிதம் மூலம் திமுக எம்.பி வலியுறுத்தல்
x
மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு  மாநில அரசால் வழங்கப்படும் இடங்களை, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று, திமுக எம்.பி வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதி உள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது வைத்த கோரிக்கையை, அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டி உள்ளார்.  இதற்கு பதிலளித்துள்ள ஹர்ஷவர்தன் "தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்"  என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்