கார்த்திகை தீபத் திருவிழா - அரோகரா முழக்கங்களுடன் ஏற்றப்பட்ட மகா தீபம்

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாளை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.
x
அண்ணாமலையார் கோவிலின் பின்புறமாக உள்ள இரண்டாயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது, மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா முழக்கம் எழுப்பி வழிப்பட்டனர்.முன்னதாக இன்று அதிகாலை மூன்றேகால் மணியளவில் திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீப தரிசனம் செய்தனர். 

இதே போல் அறுபடை வீடுகளில் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 

பழனி மலை முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை ஒட்டி சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். 

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்