ஜோசியர் அறிவுரைப்படி 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய ஐஸ் வியாபாரி

பொன்னேரி அருகே ஜோசியர் அறிவுரையின் படி புதையலுக்காக, ஐஸ் வியாபாரி ஒருவர், வீட்டிற்குள் 20அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
கும்மனூர் கிராமத்தை சேர்ந்த மோகன் என்ற ஐஸ் வியாபாரி, தமது வீட்டில் சுமார் 20அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளார். வீட்டிற்குள் பள்ளம் தோண்டப்படுவது குறித்து அக்கம்பக்கத்தினர் வருவாய்த்துறைக்கு அளித்த தகவலின் பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணையில் ஈடுபட்டனர். 

அப்போது, ஜோசியர் ஒருவர் அவரது வீட்டில் 25 அடி ஆழத்தில் புதையல் இருப்பதாக கூறியதாகவும், அதற்காக பள்ளம் தோண்டி வருவதாகவும் மோகன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணலை கொண்டு மீண்டும் அதை மூடிய வருவாய்த்துறை அதிகாரிகள், பூமிக்கடியில் புதையலே இருந்தாலும் அதை வருவாய்த்துறையிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்றும், மீண்டும் இதுபோன்று பணியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்